1 மணி நேர பரிசோதனை: காசநோயை கண்டுபிடிக்கலாம்

175

காசநோய் இருப்பதை கண்டுபிடிக்க ஒரு மணிநேர பரிசோதனை போதும் என்று அமெரிக்க நிபுணர்கள் கூறியுள்ளனர்.

காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா நுரையீரல் திசுக்களில் வளர்ச்சி அடைந்து, உடலில் பல உறுப்புகளில் பரவுகிறது.

இத்தகைய கொடிய காச நோய் இருப்பதை தெரிந்துக் கொள்ள இருமலின் போது ஏற்படும் சளி, மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதித்து கண்டுபிடிக்கப்படுகிறது.

எனினும் சிலவேளைகளில் இதில் தவறுகளும் ஏற்படுகின்றன, எனவே காசநோயை துல்லியமாக கணக்கிட ஒரு மணிநேரத்தில் செய்யக் கூடிய புதிய ரத்த பரிசோதனையை அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பரிசோதனைக்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என்றும் இதன் மூலம் காசநோயை கண்டுபிடித்து, அதற்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

SHARE