1.5 கோடி கொடுத்து திவ்யபாரதி பாடலை விலைக்கு வாங்கிய இயக்குனர் 

458
தமிழில் நிலாப் பெண்ணே என்ற படம் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 18 வயதாக இருக்கும் போதே பாலிவுட் பட தயாரிப்பாளர் சாஜித் நடிவாலாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்தார். மும்பையில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

திருமணம் ஆன மறுஆண்டே இந்த சம்பவம் நடந்ததால் இது தற்கொலையா? கொலையா? என சந்தேகத்தை கிளப்பியது. சாஜித் நடிவாலா தான் தயாரிக்கும் ஒவ்வொரு படத்தையும் திவ்ய பாரதிக்கு அர்ப்பணிப்பதாக டைட்டில் கார்ட் போட்டு வெளியிட்டார். 2004ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார் சாஜித். தற்போது சல்மான் நடிக்கும் கிக் என்ற படத்தை இயக்கி உள்ளார். திவ்யபாரதி இந்தியில் அறிமுகமான முதல்படம் விஸ்வாத்மா.

இப்படத்தில் அவர் நடித்த சாத் சமுந்தர் பார்.. என்ற அறிமுகப் பாடலை கணவர் சாஜித் ஒன்றரை கோடி ரூபாய் விலை கொடுத்து இசை நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருக்கிறார். அப்பாடலை கிக் படத்தில் இடம் பெறச் செய்திருக்கிறார். இந்த பாடலை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி படத்தில் இணைத்ததற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. தனது மகன்கள் சுபன், சுப்பான் இருவரையும் இப்படம் மூலம் அறிமுகப்படுத்துகிறார் சாஜித்

 

SHARE