1.5 கோடி செலவில் வெறித்தனமாக உடலை மெருகேற்றும் பிரபல நடிகர்

218

பிரபல நடிகர் ராணா டகுபதி தான் நடித்துகொண்டிருக்கும் பாகுபலி 2 படத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்து உடலை மெருகேற்றி வருகிறார்.

பாகுபலி திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை கவந்தது, அதில் ராணாவின் உடல கட்டமைப்பு அடடே என சொல்லவைத்தது.

தற்போது பாகுபலி – 2 படத்திற்காக தனது காட்டுத்தனமாக லுக்கை வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளார்.

அப்படி என்ன செய்தார்?

தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்ய துவங்கிவிடுகிறார்.

வெறும் வயிற்றில் 40 நிமிடங்கள் ஏப்ஸ் (வயிறு) பகுதிகளுக்கு பயிற்சி செய்கிறார். அடுத்த 30 நிமிடங்களுக்கு புஷ்-அப்ஸ், புள்-அப்ஸ் மற்றும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.

மாலை வேளைகளில் உடல் பகுதிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார். மார்பு, கைகள் என சிறிய, பெரிய தசை பகுதிகளுக்கு என தனித்தனி சிறப்பு பயிற்சிகளில் இடைவேளை எடுத்துக் கொள்ளாமல் ஈடுபடுகிறார் .

மூன்று முறை மட்டுமே உணவு உண்ணும் பழக்கம் கொண்டிருந்த இவர், இப்போது பாகுபலி 2-க்காக உணவு வேளைகளை 6 – 8 பிரித்து, சீரான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

பெரும்பாலும் காலை உணவு வேகவைத்த முட்டையின் வெள்ளை கரு, மற்றும் ப்ரோடீன் பவுடர் தான்.

ராணா மற்றும் பிரபாஸ் இருவருக்காக மட்டும் ஃபிட்னஸ் கருவிகள் மற்றும் உணவிற்காக 1.5 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டிலிருந்து பல பிரத்தியோக கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

SHARE