10 மணிநேரம் மதுக்குளியல்.. ஷேம்பைன் பாட்டிலை மாலையாக அணிந்து கொண்டாடிய இங்கிலாந்து வீரர்கள்

195
இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை சுமார் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மதுகுடித்து கொண்டாடியுள்ளனர்.ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் மது அருந்துவது என்பது இங்கிலாந்து வீரர்களின் வழக்கமான செயல் ஆகும்.இந்நிலையில் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த ஆட்டம் 3வது நாள் மதியமே முடிந்து விட்டது. அப்போது மதுபாட்டில்களை கையில் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் இரவு 10 மணி வரை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் இது தொடர்பாக கூறுகையில், ஆஷஸ் தொடரின் வெற்றி கொண்டாட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

உடைமாற்றும் அறை முழுவதும் மதுவால் நிரம்பியிருந்தது. வீரர்கள் குடித்த ஷேம்பைன் பாட்டிலை அவர்கள் தங்களுடைய கழுத்தில் மாலையாக அணிந்திருந்தார்கள் என்று கொண்டாட்டங்களை விவரித்தார்.

மேலும், ஓவல் டெஸ்டில் வெற்றி பெற விரும்புவதாகவும், அதில் தோற்றுவிட்டால் இது போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜோ ரூட்டுக்கும், வார்னருக்கும் இடையே பாரில் தகராறு ஏற்பட்டது. இதில் வார்னர், ஜோ ரூட்டின் மூக்கை உடைத்து விட்டார்.

இதனால் பாருக்குச் செல்ல ஜோ ரூட்டுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE