10 ஆவது நாளாக தொடரும் தோட்ட தொழிலாளர்களின் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று பிரவுன்சிக் பிரிவின் சேர்ந்த 8 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலை முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எம்மை பணி பகிஸ்கரிப்பு செய்யுமாறு கூறிய தொழிற்சங்கங்கள் எமக்கு நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபா பெற்று கொடுக்க வேண்டும்
அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதுடன் தொழிற்சங்கங்களுக்காக அறவிடப்படும் சந்தாவை நிறுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் எமக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றும் எமது பிள்ளைகள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர் ஆகவே இம்முறை எம்மை ஏமாற்றுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தனர்.