10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சந்தேக நபர் கைது

125

பலகை வியாபாரியொருவரின் மனைவி, குழந்தைகளை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து, 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சந்தேக நபர் இருவரை கேகாலை வலய குற்ற விசாரணை அதிகாரிகள் வரகாபொலவில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மீரிகம மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 40 வயதுடைய இரண்டு ஆண்கள் ஆவார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் கேகாலை வலய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் கேகாலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

SHARE