முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தமது உள்ளூர் பயணங்களுக்காக மாத்திரம், 1.5 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிய ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்படி இது தொடர்பில் ஏற்கனவே தகவல் திரட்டல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியை அவர் பெரும்பாலும் திவிநெகும திட்டத்தில் இருந்தே பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அவர் உள்ளுர் பயணங்களுக்கு இலங்கை விமானப்படையினர் விமானங்களை பயன்படுத்தியுள்ளார்.
சில வேளையில் வீதியில் சென்றால் 10 கிலோமீற்றர் தூரங்களுக்காக கூட அவர் விமானப்படையினர் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விரைவில் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.