உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல்தொடர்ந்து ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா.
இந்நிலையில், வட கொரியா ஏவுகணைசோதனை நடத்தியபோது அந்த வழியாக பயணித்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
330 பயணிகளுடன் ஏர் பிரான்ஸ் விமானம்டோக்கியோவில் இருந்து பாரிஸ்க்கு வட கொரியாவின் ICBM பாதை வழியாக பயணித்துள்ளது.
அப்போது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 என்ற ஏவுகணையை வட கொரியாசோதித்துள்ளது.
கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகனையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன.
ஏவுகனை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் விமானம் 10 நிமிடம் கழித்து கடந்து சென்றுள்ளது. ஒரு வேளை 10 நிமிடத்திற்கு முன்பு அது கடந்திருந்தால் நிச்சயம் ஏவுகனையால் தாக்கப்பட்டிருக்கும் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து தனது விமானங்கள் செல்லும் பகுதியை ஏர் பிரான்ஸ் நிறுவனம் மாற்றியமைத்து அறிவித்துள்ளது.
வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தும் பகுதியில் பல்வேறு நாட்டின்விமானங்கள் பயணிப்பதால் அதனை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்தும் அதனை வடகொரியா ஒரு போதும் கண்டுகொள்ளாமல் தனது சோனையில் உறுதியாக உள்ளது.