ரவுடி பேபி பாடல் இன்னும் பலரின் மனங்களில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றது. அண்மையில் வந்து வெற்றி பெற்ற மாரி 2 படத்தில் வந்த இந்த பாடல் நம் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு மேஜிக் செய்துவிட்டது.
இதற்கு காரணம் யுவனின் இசை, பிரபுதேவாவின் நடன அமைப்பு, சாய் பல்லவியின் ரிஸ்க், தனுஷின் வாய்ஸ் என பல விசயங்கள் இதில் உள்ளது. டிக்டாக் செயலியில் கூட இந்த பாடல் குறித்த விசயம் அதிகம் இடம் பெற்றது.
மேலும் Youtube ல் 252 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் Gaana என்ற செயலில் மட்டும் இந்த பாடல் 10 மில்லியன் Playouts செய்யப்பட்டுள்ளதாம்.
A big shout out to all you Rowdy Babies for making #RowdyBaby a massive hit with 10 Million plus streams on Gaana: https://t.co/4fP0j7JqwC@dhanushkraja @thisisysr #SaiPallavi @wunderbarfilms pic.twitter.com/h3WZISCQ6U
— Gaana (@gaana) February 27, 2019