100வது போட்டியில் ருத்ர தாண்டவம்! வரலாற்று சாதனை படைத்த டேவிட் வார்னர்

61

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார்.

ஆட்டநாயகன் வார்னர்
அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஹோபர்ட்டில் நடந்தது. இதில் அவுஸ்திரேலிய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அரைசதம் அடித்த வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார்.

இது அவருக்கு 25வது டி20 அரைசதம் ஆகும். மேலும், டேவிட் வார்னரின் 100வது டி20 போட்டி இதுவாகும்.

வரலாற்று சாதனை
இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் பங்குபெற்ற முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

டேவிட் வார்னர் 112 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 100 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவருக்கு முன்பாக விராட் கோலி (113, 292, 117) மற்றும் ராஸ் டெய்லர் (112, 236, 102) இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

SHARE