100 கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய புகைப்படக்காரரின் புகைப்படம்

384
ஆஸ்திரேலிய புகைப்படக்கலைஞர் பீட்டர் லிக் என்பவரின்  ‘ஃபேன்டம்’  என்ற புகைப்படம் 6.5 மில்லியன் டாலர்கள்      ( 100 கோடிக்கும் மேல்) விற்பனை செய்யப்பட்டு ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது. அரிசோனா நிலப்பரப்பில் ஒரு ஒளிக்கற்றை வெட்டிச் செல்வதைப் போன்று தோற்றமளிப்பதே இந்த புகைப்படத்தின் சிறப்பு.

இவரது மற்ற புகைப்படங்களான இல்லியூஷன், எடர்னல் மூட்ஸ் முறையே 2.4 மற்றும் 1.1 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. உலகில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட 20 படங்களில் 4 பீட்டர் லிக்குடையது. இந்த சாதனையின் மூலம் ஆண்ட்ரேஸ் குர்ஸ்கி, சிண்டி ஷெர்மென் மற்றும் ஜெஃப் வால் போன்ற புகழ் பெற்ற புகைப்படக்காரர்களின் பட்டியலில் பீட்டரும் இணைந்துள்ளார்.

ஒரு புகைப்படம் இவ்வளவு தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

SHARE