[100 டிகிரி செல்சியஸ்] என்ற படத்திற்கு முதல் நாள் பெண்களுக்கு இலவச டிக்கெட்…

438

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் புதுப் புது வழிமுறைகளை தற்போது கையாள வேண்டி வருகிறது. அந்த விதத்தில் மலையாளத் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக ‘100 டிகிரி செல்சியஸ்’ என்ற படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு படம் பார்க்க வரும் 50 பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.ராகேஷ் கோபன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படம் பெண்களை மையப்படுத்திய படம். ஸ்வேதா மேனன், அனன்யா, மேக்னா ராஜ், பாமா, ஹரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஐந்து பெண்களின் வாழ்க்கையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்க, அவற்றை அந்தப் பெண்கள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதையாம்.
சமீப காலத்தில் இந்தியத் திரையுலகில் பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத் திரையுலகிலும் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் முழுமையாக ஐந்து நடிகைகளே நடிப்பதால் முற்றிலுமாகவே பெண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஐவரில் ஹரிதா மட்டுமே புதுமுகம், மற்ற நால்வர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளனர். ஹரிதா ‘குறையொன்றுமில்லை’ தமிழ்ப் படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் அறிமுகமாகும் இரு மொழிப் படங்களும் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE