குர்திஷ் பெண் போராளி ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி (Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்பரமாக உள்ளதால் அவர்களை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த குர்து இனப் பெண்கள் நீண்ட நாட்களாய் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குர்திஷ் பெண் போராளிகளில் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ரெஹேனா (Rehana) என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உயிருடன் சிறைப்படித்துள்ளனர்.
இதனையடுத்து இவரது தலையைத் துண்டித்த தீவிரவாதிகள், துண்டித்த தலையுடன் போஸ் கொடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றது.
இதுவரை 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பெண் என்ற பெருமையை பெற்ற ரெஹேனா, இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குர்திஷ் பெண் போராளிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.