புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வானொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வானின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை மற்றும் நித்திரை கலக்கம் ஆகியனவே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.