100 கிராம மக்கள் ஒன்றிணைந்த போராட்டம்

210

தமிழகத்தின் நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி ஆகிய பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குருடாயில் மற்றும் எரிவாயு கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15 ஆம் திகதி அனுமதி அளித்தது.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் இப்போராட்டம் சமூகவலைத்தளங்களில் பரவி, மிகப்பெரிய போராட்டமாக தற்போது உருவெடுத்து வருகிறது. இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றோடு இப்போராட்டம் 12 வது நாளாக தொடருகிறது. இதற்கு தமிழகத்தின் முக்கிய கிராமங்களைச் சேர்ந்த 100 கிராம மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இக்கிராமங்களைச் சேர்ந்த 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடியதால் நெடுவாசலில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிடும் வரை மனித சங்கிலி, மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போராட்டத்திற்கு ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த தீர்வு போன்று இதற்கும் ஒரு தீர்வு வேண்டும் என்று கூறியுள்ளனர்.

SHARE