100 கோடி ரூபா ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

285
100 கோடி ரூபா ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையின் தென் கடற்பகுதியில் வைத்து 101 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 ஈரான் பிரஜைகளும் ஒரு பாகிஸ்தான் பிரஜையும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

635898668854713205879476817_Xanax 4

SHARE