1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி

17

 

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.

மேலும் மோகன்லாலுடன் ராம், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, கமல் ஹாசனுடன் தக் லைஃப் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே திரிஷாவை தான் கமிட் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். இவர் தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாப் ஹீரோவிற்கு ஜோடி
இந்த நிலையில் திரிஷாவிற்கு மற்றொரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக திரிஷா நடிக்கவேண்டும் என பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அட்லீ இயக்கத்தில் தான் அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

கடைசியாக அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்கும் படமும் ரூ. 1000 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

SHARE