1000 கோடி வசூல் டார்கெட்.. லியோ ப்ரோமோஷன் இப்படி தான் இருக்குமாம்

11

 

மாஸ்டர் வெற்றிக்கு பின் விஜய் – லோகேஷ் கைகோர்த்துள்ள திரைப்படம் லியோ. பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் என திரையுலக பட்டாளமே நடித்துள்ளது.

லியோ படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் ஆவலுடன் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் லியோ படத்தின் ப்ரோமோஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரோமோஷன்
இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கு செய்யாத ப்ரோமோஷன் வேலைகளை செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டில் லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா நடப்பதினால், கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களுக்கும் விஜய்யை அழைத்து சென்று ப்ரோமோஷன் செய்ய முடிவு எடுத்துள்ளார்களாம்.அதே போல்

மலேசியாவிழும் பிரமாண்டமாக இப்படத்திற்கான ப்ரோமோஷன் விழாவை ஏற்பாடு செய்துள்ளார்களாம். ஆனால், அதற்கு விஜய் வருவாரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. அதுகுறித்து விஜய் கூட இதுவரை முடிவு செய்யவில்லையாம்.

இந்த அனைத்து ப்ரோமோஷன் மூலம் லியோ படத்தை ரூ. 1000 கோடி வசூல் செய்ய வைக்கவேண்டும் என்பது தான் படக்குழுவின் ஐடியா என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

 

SHARE