சட்டமுறைகள் ஜெயலலிதாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை

416

 

jaya jail 56d

கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்கவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

jaya jail 56d

 

இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:- தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக கைதிகளை பார்க்க சிறைக்கு யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும்.

கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்டமுறைகள் ஜெயலலிதாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். குறிப்பாக பன்னீர்செல்வம் ஒரு முதல்வராக இருந்து கொண்டு என்னைச் சந்திக்கக்கூடாது என்பதை அவரிடம் சொல்லி விடுங்கள் என்று கூறினாராம்.

இதனால் பலரும் பல மணி காத்திருந்ததுதான் மிச்சம். சிறையில் ஜெயலலிதாவுக்கு 15X20 அடி அளவுள்ள அறை வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு ரி.வி. உள்ளது. ஜெயா எப்போதும் இருக்கும் சௌகரியமான எஸ் டைப் கதிரை சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஜெயாவுக்கு பெரிய அட்டைப் பெட்டிகளில் இட்லி, பொங்கல், சான்விஜ், பாண், என மதியம் காய்கறிகளுடன் சாப்பாடு, பழ வகைகள் அனுப்பி வைக்க அனுமதிக்கப்பட்டது.

அளவுக்கு மீறி அதிக பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஜெயலலிதா அளவாக எடுத்துக்கொண்டது போக எஞ்சியவற்றை சிறையில் இருக்கும் ஏனைய பெண் கைதிகள் சாப்பிட்டு கொண்டனராம். சசிகலாவும், ஜெயாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசி, சுதாகரன் தனித்தனி சிறையில் உள்ளனர்.

இளவரசி அவ்வப்போது ஜெயாவைச் சந்தித்துப் பேசிக்கொள்வாரம். ஜெயாவுக்கு உடல் உபாதைகள் அதிகம் இருப்பதால் இவருக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவர்கள் 3 மணி நேரத்திற்கொரு முறை பரிசோதனை செய்கின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் 4 நாள்கள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று பிணை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை.

SHARE