11 ஆண்டுகளாக குழந்தையின் உடலை மறைத்து வைத்திருந்த தாய்

271

பிரித்தானியாவில் பெற்ற குழந்தையின் உடலை 11 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது.

32 வயதான விக்டோரியா கெய்ல் என்ற பெண்ணே இக்குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

லண்டனில் உள்ள விக்டோரியாவின் தாய் வீட்டில் கடந்த மே மாதம் நடந்த சோதனையில் தோட்டத்தில் வைத்து உடல் பாகங்களை பொலிசார் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில், அது விக்டோரியாவின் மகன் Kyzerரின் உடல் என தெரியவந்துள்ளது.

உடல் பாகங்களை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தை 11 ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனினும், இரண்டு முறை பிரேத பரிசோதனை நடத்தியும் குழந்தை இறந்ததிற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் Kyzer ஊட்டச்சத்து இல்லாமல் பிறந்ததால் 13 மாதங்களில் இறந்ததாகவும், வீட்டு தோட்டத்தில் புதைத்ததாகவும் விக்டோரியா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கிங்ஸ்டன் நீதிமன்றம் விக்டோரியாவுக்கு 21 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

SHARE