11 தசாப்தங்களுக்குப் பிறகு வடபகுதியின் புகையிரதப்பாதை புனரமைப்பு

227
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான புகையிரத பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இந்தப் பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்ட பின்னர் இந்தப் பாதையை புனரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த புனரமைப்பு வேலைகளுக்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

download-12

SHARE