11 வயது சிறுவனை தலை துண்டித்து கொலை செய்த ஐஎஸ்

286

சிரியாவில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிரியாவின் அலெப்போவில் 11 வயது சிறுவனை தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சிரியாவின் அரச படைகளுக்கு ஆதரவாக உளவு பார்த்தான் என்ற குற்றத்திற்காக இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

முதலில் அந்த சிறுவனை பிடித்து கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளனர், பின்னர் அவனது கைகளை கட்டி டிரக்கின் பின்புறத்தில் படுக்க வைத்து ”அல்லாஹீ அக்பர்” என்ற உரக்க கத்தியபடி அவனது கழுத்தை அறுப்பது போன்று வீடியோ முடிவடைகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

SHARE