110 கிலோகிராம் ஹெரோய்ன் கடத்தல் – பிரதான சந்தேக நபரும் கைது

266
கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 110 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக இன்று அதிகாலை மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை ஆசிரி பிளேஸ் பகுதியை சேர்ந்த இந்த சந்தேக நபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் இருக்கின்றனரா என பொலிஸார் தேடி வருகின்றனர்.

110 கிலோ கிராம் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

SHARE