இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளின் உறவுகள் குறித்தும் பேசப்பட்டது. அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களையும் இந்தோனேசிவின் புதிய தலைவருக்கு பீரிஸ் தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட விடோடோ வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.