தெரேசா மே எடுத்த சில அதிரடி முடிவுகள்

228

பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு நான் தான் காரணம் என்று பிரதமர் தெரேசா மே எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தெரேசா மே-வின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும். ஜெர்மி கோர்பினின் தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.

இதில் மொத்தமுள்ள 650-இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது.

இதனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாரளுமன்றம் நிலை ஏற்பட்டது.

அதன் பின் வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, தெரேசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் கடந்த முறை நடந்த தேர்தலில் அதிக இடங்களை பெற்ற கன்சர்வேடிவ் கட்சி இம்முறை பெரும்பான்மை பெறவில்லை. அதற்கு தெரேசா மே எடுத்த சில நடவடிக்கைகள்தான் காரணம் என கூறப்பட்டது.

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் கன்சர்வேட்டிவ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரான போரீஸ் ஜான்சனிடம், கட்சியின் தலைமை பொறுப்பையும், பிரதமர் பதவியையும் தெரேசா மே விட்டுக்கொடுக்க வேண்டும் என ஐந்து அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.

அதைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட இந்த சரிவுக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரேசா மே, அக்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்தே எம்.பி-க்கள் அனைவரும் அமைதி காப்பதாகவும், தெரேசா மேயின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க உறுதியளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE