12 ஆயிரம் வர்த்தகர்கள் சிக்கினர்

260
அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரி வித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் 12,000 வர்த்தகர்களிடம் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு நகரில் மாத்திரம் 50 மில்லியனுக்கு அதிகமான அபராதப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 4.3 மில்லியன், குருநாகல் மாவட்டத்தில் 3.6 மில்லியன் அபராதப் பணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
SHARE