திருகோணமலை – சேருநுவர பகுதியில், ஒருவரை தாக்கி காயமேற்படுத்தி விட்டு தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
12 வருடங்களிற்கு பிறகு குறித்த நபர் பற்றி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாழைத்தோட்டத்தை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக ஒருவரை கடுமையாக தாக்கி காயமேற்படுத்தி விட்டு தலைமறைவாகியதாகவும் இந்த நபருக்கெதிராக மூதூர் நீதிமன்றில் வேறு வழக்குகள் நடைபெற்று வந்துள்ளதையடுத்து எந்த வழக்கிற்கும் சமூகமளிக்காத நிலையில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.