கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பதில் முதலமைச்சருமாகிய ஏ.எல்.முஹம்மட் நஸீர் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து அவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.
கரையோர மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவர் எம்.பி.எஸ்.முஹம்மட் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை போன்ற பிரதேசங்களில் கடந்த 1998ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை தமிழ்மொழி தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிவந்த ஆரம்பப் பிரிவு, தமிழ்மொழி, சங்கீதம், நடனம் போன்ற ஆசிரியர்களின் நிரந்த நியமனங்களை நிரந்தரமாக்கி தருவதாகக்கூறி சுமார் 7 தடவைகள் கல்வி அமைச்சினால் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தியுள்ளார்கள்.
இப்பரீட்சைக்கு தோற்றிய 109 தமிழ்மொழி ஆசிரியர்களில் ஒருவரைக்கூட இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது ஒரு மனவேதனையாகவுள்ளது.
கடந்த 2001ஆம், 2004ஆம், 2005ஆம், 2006ஆம், 2007ஆம், 2008ஆம், 2009ஆம் ஆண்டுகளில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை போன்ற பிரதேசங்களில் தங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி நேர்முகப் பரீட்சையின்போது 70 சகோதரமொழி ஆசிரியர்கள் எங்களுடன் தோற்றியிருந்தார்கள். இதில் தோற்றிய 70 சக சகோதரமொழி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் குறித்த ஆண்டிலேயே வழங்கப்பட்டுள்ளது.
எங்களுக்கான நியமனங்களை ஏன் வழங்க மறுக்கின்றார்கள் என்பது இதுவரை விளங்கவில்லை. இதுதொடர்பில் கல்வியமைச்சரிடம் தெரிவித்தோம். கல்வியமைச்சரும் தங்களின் நியமனங்களை வழங்குவதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை என்றார்.
இதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பதில் முதலமைச்சருமாகிய ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறுகையில், உங்களின் பிரச்சினை தொடர்பாக ஆளுநனர், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி இதற்கு தக்க தீர்வினை பெற்றுத்தருவதாகவும் உறுதிமொழியளித்தையடுத்தே அவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.