தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வெளிப்புற தோலை பாதுகாக்கவும் துணை புரிகிறது என்பது தான் ஆச்சரிய செய்தி. சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்துவிடுவார்கள். நியூட்ரிசியன்கள் நிறைந்த தயிரை நம் தோலில் அப்ளை செய்வதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
100 கிராம் அளவுள்ள தயிரில் 1 மில்லி கிராம் ஜிங்க் இருக்கிறது. ஆஸ்ட்ரிஜண்ட் போல செயல்படும் இதனால் நம் உடலில் உள்ள செல்களின் இனப்பெருக்கத்திற்கும், நம் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் சுரப்பிகளின் வளர்சிக்கும் காரணமாய் இருக்கிறது. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வருவது தவிர்க்கப்படும்.