இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்களை சர்வதேச மட்டத்தில் தரமுயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக கல்வியாளர்கள் மத்தியில் சுற்றுநிருங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இந்த திட்டத்தை இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் வரவேற்றுள்ளது.
இந்த சுற்றுநிருபங்கள் இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன.
உதவி விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் ஆகியோர் கட்டாயமாக முதுமாணி அல்லது கலாநிதி பட்டயங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி கல்வியாளர்கள் இலகுவாக பதவியுயர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் தற்போதைய திட்டத்தின்படி கல்வியாளர் ஒருவர் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்காவிட்டால் அவர் உதவி விரிவுரையாளர் பதவிக்கே விண்ணப்பிக்க முடியும்
அதேநேரம் அவர் குறைந்தது 10 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டும்.
இதேவேளை விரிவுரையாளர் ஒருவர் 15 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டும்.
சிரேஸ்ட விரிவுரையாளர் குறைந்தது 20 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இதற்கிடையில் கிடைத்துள்ள தகவல்களின்படி கலாநிதி பட்டங்களை கொண்டிருக்காத பலர் உயர் கல்வியாளர் நிலைகளுக்கு தரமுயர்த்தப்பட்டிக்கின்றனர் என்று கல்வி சமூக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.