தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் பிரமாண்டாமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை அட்லீ இயக்க, காஜல், சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் என்பதால் பாடல்கள் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் பாடல்களும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரும் என அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா புதிய முறையில் நடக்கவுள்ளதாம், ரகுமான் பிரமாண்ட இசை கச்சேரி ஒன்றை ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தவுள்ளாராம்.
அதில் அப்படியே மெர்சல் படத்தின் இசை வெளியீடும் நடக்கும் என கூறப்படுகின்றது.