13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்க இலங்கை இணக்கம்

286

13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் 13ம் திருத்தச் சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவான வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சமர்ப்பித்துள்ள தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ள இல்ஙகை அதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.
இதன் ஊடாக 13ம் திருத்தச் சட்டத்தை முழு அளவில் அமுல்படுத்த சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக குறித்த இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE