சம்பிக்க ரணவக்கவும் அவரது கட்சியும் கடந்த காலங்களில் மாகாண சபை முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தது.
பிரிக்கப்படாத ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்வு அடுத்த 18 மாதங்களுக்குள் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்ட இலங்கைக்குள் அதிகாரத்தை எப்படி பரவலாக்க முடியும் என அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமான சட்ட வல்லுநர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க விருப்பம் வெளியிட்டுள்ள 13வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் மாகாணங்களுக்குரியது.
எனினும் இது சம்பந்தமாக மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து நியாயமான நீடித்த அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.