‘மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க‘ படத்தில் ஹீரோ, ஹீரோயின் தவிர இந்த படத்தில் 13 காமெடியன்கள் இணைந்து நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் தஞ்சை கே.சரவணன் கூறியது:இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக நான் பணியாற்றியதில்லை. சினிமா மீதான ஆர்வத்தால் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு, இசை ஆகிய பொறுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன். சுரேஷ்குமார் ஹீரோ. அஷதா ஹீரோயின். இவர்கள் தவிர பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர், கொட்டாச்சி, பிளாக் பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன், போண்டா மணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவை பானு என 13 காமெடி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. கமர்ஷியல் என்ற போர்வையில் கிளாமரும் புகுத்தவில்லை