இன்று காலை 8.00 மணி அளவில் பால் சேகரிக்கும் நிலையத்திற்கு பாலைக் கொடுத்து விட்டு வீடு திரும்பும் வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பால் எடுத்துச் சென்ற பிள்ளை வீடு திரும்ப வில்லை எனப் பெற்றோர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டு பகல் 12 மணி அளவில் மாவத்தகம பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு தெரிவித்துள்ளனர். அப்பொழுது பொலிஸார் சொந்தக் காரர்களின் வீடுகளுக்குச் சென்று தேடிப் பார்த்து விட்டு வாருங்கள் எனக் கூறியுள்ளனர்.
இவ்வாறு தேடும் போது மாலை ஆறு மணி அளவில் சமீபத்திலுள்ள வீட்டை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அந்தச் சிறுமி கொலை செய்யப்பட்டு துணியால் சுற்றி சமயலறையில் வைக்கப்பபட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இவருடைய மனைவி வெளிநாடு சென்று ஒரு மாதம் எனவும் இவருடைய பிள்ளைகள் வீட்டில் இருக்க வில்லை. பிள்ளைகள் யாவும் தாயின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.