அக்குரஸ்ஸ – பிட்பெத்தர தரங்கல பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சந்தேக நபர்கள் 7 பேரையும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமியை காணவில்லையென அவரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் அக்குரஸ்ஸ, மாத்தறை, கம்பஹா மற்றும் நெலுவ பிரதேசங்களில் வைத்து சிறுமியை இடைக்கிடையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
தொழிநுட்ப உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.