131 ரன்னில் சுருண்டு மண்ணைக் கவ்விய இந்திய அணி! வதம் செய்த தென் ஆப்பிரிக்க பவுலர்கள்

232

 

தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 32 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 245 ஓட்டங்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 101 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 408 ஓட்டங்கள் குவித்தது. டீன் எல்கர் 185 ஓட்டங்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா ரன் எடுக்காமலும், ஜெய்ஸ்வால் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக பவுண்டரிகளை விரட்டிய சுப்மன் கில் 26 ஓட்டங்களில் போல்டு ஆனார்.

அதன் பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுகட்டுப் போல் சரியத் தொடங்கியது. விராட் கோலி மட்டும் ஒருபுறம் போராடி அரைசதம் அடிக்க, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினர்.

இறுதியில் இந்திய அணி 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. கோலி 82 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நன்ரே பர்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

SHARE