நடிகை நமீதாவுக்கு கல்யாணம்-வீடியோ திருப்பதி: காதலர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே திருமணம் செய்து கொண்டதாக நமீதா கூறியுள்ளார்.
நடிகை நமீதா இன்று தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
பிக்பாஸ் குடும்பத்தினரும் பங்கேற்றனர். திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, தனது கணவரை மச்சான் என்று அழைத்தார். மச்சான் மேல மனசுப்பூராவும் காதலில் இருக்கிறேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டே திருமணம் செய்து கொண்டோம். இப்பொழுதுதான் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் நான் சினிமாவில் நடிப்பதை தொடருவேன் என்று கூறியுள்ளார் நமீதா.