கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த 2015 ஆம் ஆண்டு அரச ஊழியர்களில் சுமார் 14 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2014 ஆண்டு ஐந்து லட்சத்து 46 ஆயிரத்து 379 பேராக காணப்பட்ட ஓய்வுதியம் பெறுவோர் எண்ணிக்கை கடந்த வருடத்தில் ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 408 பேராக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வருடாந்தம் 15 ஆயிரத்துக்கும் 20 ஆயிரத்துக்கும் இடையில் இந்த ஓய்வுதியம் பெறுவோராக உள்ளனர். ஓய்வுதியம் வழங்குவதற்கு மாத்திரம் வருடாந்தம் 165 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. வருடாந்தம் அதிகரிக்கும் ஓய்வுதியம் பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதற்கான நிதியும் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.