14 கோடி மிகப்பெரிய தொகை: CSK-வால் வாங்கப்பட்ட டேரில் மிட்செல் உருக்கம்

130

 

ஐபிஎல் தொகை மூலம் எனது மகள்கள் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை அணியில் மிட்செல்
: உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல்-லின் 2024ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றது.

இதில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல்-ஐ சுமார் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

டேரில் மிட்செல் உருக்கமான பதிவு
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 14 கோடிக்கு தான் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் CSK அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட அன்று என்னுடைய பெரிய மகளுக்கு பிறந்தநாள். என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளேன் என்பது புரிய வாய்ப்பில்லை.

ஆனால் இந்த மிகப்பெரிய தொகையின் மூலம் என்னுடைய இரண்டு மகள்களும் அவர்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை வாழ்வார்கள். நாம் செய்வது அனைத்தும் நமது மகள்களுக்காகத் தான் என்று மிக உருக்கமாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் பதிவிட்டுள்ளார்.

SHARE