14000 ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம்  கண்டுபிடிப்பு

225

கனடாவின் அருகில் 14000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலவருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதில் தற்போது கனடாவின் விக்டோரியா மாகாணத்திலிருந்து 500 கிலோ மீற்றர் அருகில் உள்ள Triquet தீவில் ஒரு கிராமத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிராமம் 14000 வருடம் பழமையானது என அவர்கள் கூறியுள்ளனர். இது எகிப்து பிரமிட்கள் தோன்றியதற்கு முன்னால் தோன்றிய கிராமம் எனவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர் Alisha Gauvreau கூறுகையில், தற்போது இந்த கிராமத்தில் சில தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளோம்.

விரைவில் நெருப்பு மூட்ட பயன்படும் சிக்கி முக்கி கற்கள், மீன் கொக்கிகள் போன்றவை கிடைக்கும் என எதிர்ப்பார்கிறோம்.

இங்கிருந்து அந்த காலத்திலேயே மக்கள் வேறு இடத்துக்கு குடி பெயர்ந்துள்ளதாக கருதுகிறோம் என அவர் கூறியுள்ளார்.

SHARE