முஸ்லீம் கட்சிகள் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களின் வாலைத் தான் பிடிப்பார்கள்
முதுகெலும்பில்லாத கட்சிகளில் இவர்களும் ஒன்று. முஸ்லீம் காங்கிரசை பலப்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு தமது ஆசனங்களுக்காகவும், அமைச்சுப் பதவிகளுக்காகவும் பல்வேறு விரயங்களை இவ்வரசாங்கத்தினால் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். குறிப்பாக இவ்வரசால் முஸ்லீம் மக்களுக்கு மதச் சுதந்திரம் என்பது இல்லாமல் போயுள்ளது. தம்புள்ளை, அநுராதபுரம், திருகோணமலை போன்ற இடங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு இருந்த இடம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல்கள் கற்களாலும் தாக்கப்பட்டது.
தர்கா நகரத்தில் முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டும், அவர்களின் உடமைகளுக்கு சேதம் விடுக்கப்பட்டது. அப்போதும் கூட முஸ்லீம் தலைவர்கள் மஹிந்தவின் கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார்கள். இவ்விடயம் நகைப்பிற்குரியதும், வேதனைக்குரியதுமாகும். ஜிஹாத் என்பது முஸ்லீம் மக்களினது இறுதிப்போர். அதாவது தமது மதத்திற்கெதிராக யார் செயற்படுகிறார்களோ அவர்களுக்கெதிரான போர் நடவடிக்கையாகும். ஆனால் தமது நாற்காலிகளை நிரப்புகின்ற நடவடிக்கையாகவே முஸ்லீம் தலைவர்கள் செயற்படுவது அல்லாஹ்வுக்கு செய்யும் துரோகச் செயலாகும் என்பதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்த காலகட்டத்தில் முஸ்லீம் தலைவர்கள் எவ்வாறு செயற்பட்டனரோ அவ்வாறு செயற்பட்டால் இலங்கைத்தீவில் முஸ்லீம் மக்கள் காக்கப்படுவார்கள். இல்லையேல் சிங்களவர்களால் கூறிக்கொள்ளும் சிறுபான்மை இனம் என்ற தமிழ் பேசும் மக்கள் சின்னாபின்னமாக்கப்படுவார்கள்.
THINAPPUYAL NEWS