வவுனியாவில் குறித்த வைத்தியர் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவதூறு செய்யும் வகையில் பொலிசில் முறையிட்ட சம்பவத்திற்கு தினப்புயல் ஊடகம் கண்டனம்

222

வவுனியாவில் அண்மையில் போலி வைத்தியர் என்று அவரை பல முகநூல்களும் ஒருசில ஊடக முகவர்களும் செய்திகளை பிரசுரித்திருந்தனர். எந்த ஊடகம் யார் ஊடகவியலாளர் என்பதனை சுட்டிக்காட்டியே பொலிசாரிடம் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்திருக்கவேண்டும். ஒட்டுமொத்தத்தில் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதும் சேறு பூசும் இத்தகைய செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. நெருப்பில்லாமல் புகை வராது என்பதுபோல் குறித்த வைத்தியரிடமும் தவறுகள் இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொடுத்தவர் குறித்த வைத்தியரே.

15 ஊடகங்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் முன்னணி ஊடகங்களும் அடங்குகின்றன. குறித்த ஊடக நிறுவனங்களுடன் இது தொடர்பில் அல்லது ஆசிரியர் குழாமிடம் உரையாடிய பின்னரே குறித்த வைத்தியர் பொலிசில் முறைப்பாடு செய்திருக்கவேண்டும். இந்த வைத்தியர் ஆயுள் வேத வைத்தியராக இருந்துகொண்டு ஆங்கில மருந்து வகைகளை வழங்கி தனது மருத்துவத்தை செய்துவந்தார் என்ற குற்றச்சாட்டும் ஆதாரங்களுடன் நிரூபணம் செய்யப்பட்டது. இதனை சுகாதார திணைக்களம் கவனித்து அதற்கான நடவடிக்கைகளை செய்யவேண்டும். பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்பதற்கு குறித்த பெண் வழங்கிய காணொளி வாக்குமூலம் இருக்கிறது. பெண்ணுக்கு எதிராக முதலில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் இருந்து சட்ட ரீதியாக தான் விடுதலை பெறும் பட்சத்தில் குறித்த ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டிருக்கவேண்டும். குறித்த மருத்துவரில் பிழை இல்லை என்றால் ஏன் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். ஊடகங்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக்கொண்டு பொலிசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றால் அது தவறான விடயம். அப்படி என்றால் பொலிசாருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு ஊடகங்களும் ஒரு சம்பவம் இடம்பெற்றால் அதனை  வேறு வேறு கோணங்களில் எழுதுவது வழக்கம். அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை கண்டறிந்து பொலிசாரும் கூட குறித்த வைத்தியரை கைதுசெய்திருக்கவேண்டும். அந்த அடிப்படையில் குறித்த வைத்தியர் போலி வைத்தியரா இலலையா என்பதை நீதிமன்றமே விசாரணையின் பின்னர் அறிவிக்கவேண்டும். பின்னர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் செயற்பட்டாரா என்பதையும் அறிவிக்கவேண்டும். சம்பவம் இடம்பெற்றபோது குறித்த ஊடகங்கள் முறைகேடாக செய்திகளை வெளியிட்டிருந்தனர் என்பது இவரது குற்றச்சாட்டு. மேற்குறிப்பிடப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த மருத்துவர் விடுதலை பெறும் பட்சத்திலேயே இவர் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவற்றிற்கு எதிராக மான நஸ்ட வழக்கு கோரியிருக்கவேண்டும். இதனால் பொறுப்புடன் நடந்துகொண்டிருந்த ஊடக நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மருத்துவரின் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

விசாரணைகளின் பின் நிலைமைகள் தெளிவாகக் கூறப்படும். அதற்கு முன்னர் ஊடகங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையில் குறித்த மருத்துவர் ஈடுபட்டிருக்கின்றார் என்பதே எமது குற்றச்சாட்டு. இவ்விடயம் தொடர்பாக குறித்த மருத்துவரை நேரடியான விவாதத்திற்கு தினப்புயல் ஊடக நிறுவனம் அழைத்து நிற்கிறது.

செய்யப்பட்ட முறைப்பாட்டின் விபரம் பின்வருமாறு :

15 தமிழ் இணைய செய்தி ஊடகங்களுக்கு எதிராகவும், சில போலி இணைய ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியாவில் தனியார் வைத்திய நிலைய வைத்தியர் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் இலங்கை செய்தி ஊடக விதிமுறைகளை மீறி செய்திகளை வெளியிட்டது தொடர்பாகவும், உண்மைக்கு புறம்பாகவும், செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு மக்களுக்கு தவறான செய்திகளை வழங்கி மக்களிடத்தில் வைத்தியருக்கு உள்ள நன்மதிப்பை இல்லாமல் செய்யும் செயற்பாடு தொடர்பாகவும் பின்வரும் தமிழ் இணைய செய்தி ஊடகங்களுக்கு எதிராக 10/07/2018 அன்று மதியம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1) Tnn.lk
2) Slknews.com
3) Tamilwin.com
4) Vavuniyanet.com
5) Tamilcnn.lk
6) Virakesari.lk
7) Newsvanni.com
8)Vanninews.lk
9) Lankamurasu.com
10) Puthuvithi.com
11) Quicknewstamil.com
12) Athirvu.com
13) Puthiyapoomo.com
14) JVP tamil news.com
15) Athirady.com

ஆகிய இணைய செய்தி ஊடகங்களுக்கு எதிராகவும், இவ் ஊடகங்களுக்கு செய்தியை வழங்கிய நபர்களுக்கு எதிராகவும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிலும், வவுனியா உயர் நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த குற்றங்களை சில இணைய ஊடகவியலாளர்கள்??? காவல் நிலையத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறைப்படி ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்யாதவர்களினாலும், ஊடகம் தொடர்பான சட்டங்களை அறியாதவர்களினால் தான் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

*இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது யாருடைய கடமை?????

No automatic alt text available.
SHARE