அஜித் நடித்த ராஜா படத்தில் நடித்திருந்தனர் நடிகை பிரியங்கா உபேந்திரா. கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவியான இவர் விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து அவர் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.
பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் தான் பிரியங்கா முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த படம் தமிழ்-கன்னடத்தில் ஷூட் செய்யப்படுவதால் வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.