நியூசிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளியன்று நாடு திரும்பவுள்ளார்.
அதன்பின்னர், 1500 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் பலதரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வறுமை ஒழிப்புத் திட்டம் உள்ளிட்ட பொருளாதார நோக்கங்களை மையப்படுத்தியே இத்திட்டம் அமையவுள்ளது என்றும், அரசின் நான்கு வருடங்களுக்கான வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல்மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக மெகா பொலிசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏனைய மாகாணங்களில் கைத்தொழில் பேட்டைகள் அமைத்தில் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களும் இந்த 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சித் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.