15000க்கும் அதிகமானவர்கள் உயிர் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை!

148

img_4571

அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை தடுக்க முடியாதென காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை வைத்தியர் நாமல் கமகே தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மற்றும் இருதய நிபுணர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக, ஆரம்பிக்கப்பட்ட பணி புறக்கணிப்பினை தொடர்ந்த முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மங்கள ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காலி, கராப்பிட்டிய, தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் தங்களுக்கு இணங்கக்கூடிய வகையிலான பதில் ஒன்று கிடைக்கவில்லை எனவும், கோரிக்கைகளுக்கமைய தீர்வு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார செயலாளர் மற்றும் சேவை இயக்குனர் ஜெனரல் குறிப்பிட்டார். எனினும் அதனை நம்ப முடியாதென மங்கள தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் 4ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலை மூலம் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கு இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தற்போது வரையில் 6000 நோயாளிகள் பட்டியலில் உள்ளதாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு நான்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது புதிதாக 6 நோயாளிகள் சிகிச்சைக்காக குறித்த பட்டியலில் இணைவதாகவும் அந்த அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

பணிபுறக்கனிப்பு காரணமாக இந்த நாட்களில் சிகிச்சை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொடுப்பனவு, சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு 32 அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அனைத்து கோரிக்கைகளுக்குமான தீர்வு வழங்கப்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் சிறுவர் பிரிவு அதிகாரிகளும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்கம், சமகால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE