நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ரசிகர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்ததோ அதைவிட அவரது குடும்பத்தினரை அது அதிகம் பாதித்துள்ளது.
மேலும் அவரது மூத்த மகள் ஜான்வி தற்போது தான் தன் முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். நேற்று அன்னையர் தினம் என்பதால் ஜான்வி மிக உருக்கமாக தன் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் ஸ்ரீதேவியுடன் சந்தோசமாக சிரித்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவியை மிஸ் செய்வதைதான் அவர் அந்த பதிவின் மூலம் சொல்லியிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை 10 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.