கோரா மோப்ப நாயின் இறுதி கிரியைகள்

221

(நோட்டன் பிரிஜ் நிருபர் – மு.இராமசந்திரன்)

பொலிஸ் கோரா மோப்ப நாய் புற்றுநோயினால் உயிர் இழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு.
அட்டன் பொலிஸ் வலயத்தில் உள்ள கோரா என்ற மோப்ப நாய் புற்றுநோயினால் உயிர் இழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கோரா மோப்ப நாயிற்கான பிரதேச பரிசோதனை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றபோதே அறிவிக்கப்பட்டது. கடந்த 29ம் திகதி செவ்வாய் கிழமை கண்டி பகுதியில் உள்ள மோப்ப நாய்களின் பயிற்சி நிலையத்திற்காக அழைத்து செல்லப்பட்டபோதே திடீரென பயிற்சி நிலையத்தில் வைத்து உயிர் இழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

  

  

  

  

  

  

  

  

  

  

எனவே இந்த கோரா மோப்ப நாயின் இறுதி கிரியைகள் 31.05.2015 வியாழக்கிழமை மாலை 04.15 மணிக்கு இடம்பெற்றது. அட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டிய தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிக்கிரியை நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க மற்றும் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை கோர மோப்ப நாயின் இறுதிக் கிரியைகளில் சர்வமத அனுஸ்டானங்களும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

கோரா மோப்ப நாய் அட்டன் பொலிஸ் வலயப் பகுதியிலும், சிவனொளிபாத மலை பருவ காலத்தின் போது அதிகளவிலான போதைப் பொருளைக் கொண்டு வந்த சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த கோரா என்ற மோப்ப நாயின் வயது எட்டு எனவும் அம்பாறை, மட்டகளப்பு, பேலியகொட, பண்டாரவள, ஹட்டன் ஆகிய பகுதிகளில் சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE