எச்சரிக்கும் எலக்ட்ரானிக் மூக்கு

251

எச்சரிக்கும் எலக்ட்ரானிக் மூக்கு!

.

நச்சுப் பொருட்கள், கெட்டுப் போன பொருட்கள், உயிரைப் பறிக்கும் விஷ வாயுக்கள். இவை எல்லா வற்றிற்கும் குறிப்பிட்ட வகை வாடை உண்டு.
அவற்றை கண்ட றிவதற்கென, ஜெர்மனியை சேர்ந்த கார்ல்சுருகே தொழில்நுட்ப நிலையம் ஒரு மின்னணு மூக்கு ஒன்றை உருவாக்கியுள்ளது.

கையடக்கமான இந்த செயற்கை மூக்கில், பல நுண்ணிய உணரிகள் இருக்கின்றன.
இந்த உணரிகளின் மீது, காற்றிலுள்ள வாடைகள் படும்போது, அவற்றின் வேதித் தன்மையை பகுத்தறிந்து, இதே கருவி யில் இருக்கும் சிலிக்கன் சில்லிற்கு தெரிவிக்கின்றன.

ஏராளமான வாடை களை முன்பே இந்த சில்லில் பதிந்து வைத் திருப்பதால், அவற்றுடன் ஒப்பிட்டு, தீய வாடை ஒரு வினாடி எதனுடையது என்பதை இந்தக் கருவி வினாடியில் சொல்லி விடும். செயற்கை மூக்கு தொழில்நுட்பத்தை கார்ல்சுருகே நிலையம் வர்த்தக ரீதியில் விரைவில் வெளியிட இருக்கிறது. அடுத்த சில ஆண்டு களில் செல்பேசிகளில் மொபைல் போன்களில் இந்தக் கருவியின் சிறிய அவதாரம் இடம் பெறக்கூடும் என இதை உருவாக்கிய விஞ் ஞானிகள் ஊடக ங்களிடம் தெரிவித்துள்ளனர்.

SHARE