16 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் உடன் இந்திய பிரஜை கைது

260

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு செல்லமுற்பட்ட 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட் உடன் இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை நோக்கி பயணிக்க வருகை தந்த போதே சுங்க பிரிவினரால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தினசரி இந்தியாவிற்கு இலங்கைக்கும் பயணிக்கும் 26 வயதுடைய இந்திய பிரஜை என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த இளைஞன் தனது பயணப்பையில் மறைத்து கொண்டு வந்த 300 கிராம் பெறுமதியான 3 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

SHARE